Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Qasas — Ayah 25

فَجَآءَتۡهُ إِحۡدَىٰهُمَا تَمۡشِي عَلَى ٱسۡتِحۡيَآءٖ قَالَتۡ إِنَّ أَبِي يَدۡعُوكَ لِيَجۡزِيَكَ أَجۡرَ مَا سَقَيۡتَ لَنَاۚ فَلَمَّا جَآءَهُۥ وَقَصَّ عَلَيۡهِ ٱلۡقَصَصَ قَالَ لَا تَخَفۡۖ نَجَوۡتَ مِنَ ٱلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ ٢٥
அவர்கள் இருவரும் சென்று தங்களின் தந்தையிடம் நடந்தவற்றைக் கூறினார்கள். அவர் அவர்களில் ஒருத்தியைமூஸாவை அழைத்து வருமாறு அனுப்பினார். அவள் வெட்கத்தோடு வந்து மூஸாவிடம் கூறினாள்: “நிச்சயமாக நீர் எங்களின் கால்நடைகளுக்கு தண்ணீர் புகட்டியதற்குக் கூலி வழங்குவதற்காக என் தந்தை உங்களை அழைக்கின்றார்.” மூஸா அந்தப் பெண்களின் தந்தையிடம் வந்தபோது நடந்த எல்லா சம்பவங்களையும் கூறினார். அதற்கு அவர் அவரை அமைதிப்படுத்தி கூறினார்: “பயப்படாதீர். நீர் அநியாயக்கார மக்களான ஃபிர்அவ்னிடமிருந்து அவனுடைய சமூகத்தினரிடமிருந்தும் தப்பிவிட்டீர். ஏனெனில் மத்யன் அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. இங்கு அவர்களால் உமக்குத் தீங்கிழைக்க முடியாது.”