Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Qasas — Ayah 26

قَالَتۡ إِحۡدَىٰهُمَا يَٰٓأَبَتِ ٱسۡتَـٔۡجِرۡهُۖ إِنَّ خَيۡرَ مَنِ ٱسۡتَـٔۡجَرۡتَ ٱلۡقَوِيُّ ٱلۡأَمِينُ ٢٦
இரு பெண்களில் ஒருத்தி கூறினாள்: “நம் ஆடுகளை மேய்ப்பதற்கு இவரை வேலைக்கு அமர்த்திக் கொள்ளுங்கள். பலத்தையும் அமானிதத்தையும் ஒருசேர பெற்றுள்ள இவரே நீங்கள் வேலைக்கு அமர்த்துவதற்கு மிகவும் தகுதியானவர். பலத்தினால் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணியைச் செவ்வனே செய்வார். அமானிதத்தினால் நம்பி ஒப்படைப்பதைப் பாதுகாப்பார்.