Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Qasas — Ayah 27

قَالَ إِنِّيٓ أُرِيدُ أَنۡ أُنكِحَكَ إِحۡدَى ٱبۡنَتَيَّ هَٰتَيۡنِ عَلَىٰٓ أَن تَأۡجُرَنِي ثَمَٰنِيَ حِجَجٖۖ فَإِنۡ أَتۡمَمۡتَ عَشۡرٗا فَمِنۡ عِندِكَۖ وَمَآ أُرِيدُ أَنۡ أَشُقَّ عَلَيۡكَۚ سَتَجِدُنِيٓ إِن شَآءَ ٱللَّهُ مِنَ ٱلصَّٰلِحِينَ ٢٧
அவர்களின் தந்தை மூஸாவிடம் கூறினார்: “நீர் எட்டு ஆண்டுகள் என் ஆடுகளை மேய்க்க வேண்டும் என்பதை மஹராக -மணக்கொடையாக- ஆக்கி இரு பெண்களில் ஒருத்தியை உமக்கு மணமுடித்துத் தர விரும்புகிறேன். நீர் பத்து ஆண்டுகள் நிறைவு செய்தால் அது நீர் செய்யும் உபகாரமாகும். உமக்கு கட்டாயம் அல்ல. நிச்சயமாக உடன்படிக்கை எட்டு ஆண்டுகள் தான். அதற்கு மேல் உள்ளவை விரும்பத்தக்கதுதான். உனக்கு சிரமமாக இருப்பதை நான் கட்டாயப்படுத்த விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் ஒப்பந்தங்களை முறிக்காமல் நிறைவேற்றும் நல்லவர்களில் ஒருவராக என்னை நீர் காண்பீர்.