Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Qasas — Ayah 47

وَلَوۡلَآ أَن تُصِيبَهُم مُّصِيبَةُۢ بِمَا قَدَّمَتۡ أَيۡدِيهِمۡ فَيَقُولُواْ رَبَّنَا لَوۡلَآ أَرۡسَلۡتَ إِلَيۡنَا رَسُولٗا فَنَتَّبِعَ ءَايَٰتِكَ وَنَكُونَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ ٤٧
அவர்களின் நிராகரிப்பு மற்றும் பாவங்களினால் இறைவேதனை அவர்களைத் தாக்கிவிட்டால் தங்களிடம் தூதர்களை வராததை ஆதாரமாகக் காட்டி அவர்கள் கூறுவார்கள்: “நீ எங்களின்பால் ஒரு தூதரை அனுப்பியிருக்கக் கூடாதா? நாங்கள் உன் வசனங்களைப் பின்பற்றி அவற்றின்படி செயல்பட்டிருப்போமே! தங்கள் இறைவனின் கட்டளையின்படி செயல்படும் நம்பிக்கையாளர்களாக நாங்கள் ஆகியிருப்போமே!” இவ்வாறு மட்டும் இல்லையெனில் நாம் அவர்களை உடனடியாகத் தண்டித்திருப்போம். ஆயினும் அவர்களுக்கு நாம் தூதர்களை அனுப்பி காரணத்தை நீக்கும் வரை அதனை அவர்களை விட்டும் தாமதப்படுத்துகின்றோம்.