Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Qasas — Ayah 48

فَلَمَّا جَآءَهُمُ ٱلۡحَقُّ مِنۡ عِندِنَا قَالُواْ لَوۡلَآ أُوتِيَ مِثۡلَ مَآ أُوتِيَ مُوسَىٰٓۚ أَوَلَمۡ يَكۡفُرُواْ بِمَآ أُوتِيَ مُوسَىٰ مِن قَبۡلُۖ قَالُواْ سِحۡرَانِ تَظَٰهَرَا وَقَالُوٓاْ إِنَّا بِكُلّٖ كَٰفِرُونَ ٤٨
குறைஷிகளிடம் முஹம்மது தம் இறைவனிடமிருந்துதூதைக் கொண்டு வந்தபோது அவர்கள் அவரைப் பற்றி யூதர்களிடம் விசாரித்தனர். அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக முஹம்மது தம் இறைவனிடமிருந்து வந்த தூதர் என்பதற்கு அடையாளமாக மூஸாவுக்கு வழங்கப்பட்ட கை, கைத்தடி போன்ற அற்புதங்கள் அவருக்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டாமா?” தூதரே! நீர் அவர்களிடம் கூறுவீராக: “இதற்கு முன்னர் மூஸாவுக்கு வழங்கப்பட்டதை யூதர்கள் நிராகரிக்கவில்லையா? அவர்கள் குர்ஆனுக்கும் தவ்ராத்துக்கும் கூறினார்கள்: “ நிச்சயமாக இரண்டுமே ஒன்றையொன்று பலப்படுத்தும் சூனியமே என்று. இன்னும் நிச்சயமாக நாங்கள் அவையிரண்டையும் நிராகரிக்கின்றோம் என்று கூறினார்கள்.”