Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Qasas — Ayah 56

إِنَّكَ لَا تَهۡدِي مَنۡ أَحۡبَبۡتَ وَلَٰكِنَّ ٱللَّهَ يَهۡدِي مَن يَشَآءُۚ وَهُوَ أَعۡلَمُ بِٱلۡمُهۡتَدِينَ ٥٦
தூதரே!- அபூ தாலிப் போன்ற நீர் விரும்பியவர்களுக்கு நிச்சயமாக உம்மால் ஈமானின்பால் நேர்வழியை அடையவைக்க முடியாது. ஆனால் அல்லாஹ் மட்டுமே தான் நாடியோருக்கு நேர்வழியை அடையவைக்கிறான். நேரானபாதையின் பால் நேர்வழிபெற்றவர்கள் என தனது அறிவில் ஏற்கனவே முடிவாகியுள்ளவர்களைப் பற்றி அவன் நன்கறிந்தவன்.