Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Qasas — Ayah 57

وَقَالُوٓاْ إِن نَّتَّبِعِ ٱلۡهُدَىٰ مَعَكَ نُتَخَطَّفۡ مِنۡ أَرۡضِنَآۚ أَوَلَمۡ نُمَكِّن لَّهُمۡ حَرَمًا ءَامِنٗا يُجۡبَىٰٓ إِلَيۡهِ ثَمَرَٰتُ كُلِّ شَيۡءٖ رِّزۡقٗا مِّن لَّدُنَّا وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ ٥٧
மக்காவைச் சேர்ந்த இணைவைப்பாளர்கள் நம்பிக்கைகொள்ளாமல், இஸ்லாத்தை பின்பற்றாமல் இருப்பதற்கு பின்வருமாறு சாக்குப்போக்குக் கூறுகிறார்கள்: “நாங்கள் நீர் கொண்டுவந்த இஸ்லாத்தைப் பின்பற்றினால் எங்களின் நாட்டிலிருந்து எதிரிகள் எம்மை விரைவாக தூக்கிஎறிந்து விடுவார்கள்.” இந்த இணைவைப்பாளர்களுக்கு பாதுகாப்பான பூமியை நாம் வழங்கவில்லையா? அங்கு அநியாயம் செய்வதோ இரத்தம் ஓட்டுவதோ தடுக்கப்பட்டுள்ளது. ஏனையவர்கள் அவர்களைத் தாக்குவார்கள் என்ற பயமின்றி உள்ளார்கள். நம்மிடமிருந்துள்ள வாழ்வாதாரமாக எல்லாவற்றின் விளைச்சல்களையும் அங்கு நாம் கொண்டு வரவில்லையா? அவர்களில் பெரும்பாலானோர் அவனுக்கு நன்றி செலுத்துவதற்கு அல்லாஹ் அவர்களின் மீது பொழிந்த அருட்கொடைகளை அறியாமல் இருக்கிறார்கள்.