Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Qasas — Ayah 7

وَأَوۡحَيۡنَآ إِلَىٰٓ أُمِّ مُوسَىٰٓ أَنۡ أَرۡضِعِيهِۖ فَإِذَا خِفۡتِ عَلَيۡهِ فَأَلۡقِيهِ فِي ٱلۡيَمِّ وَلَا تَخَافِي وَلَا تَحۡزَنِيٓۖ إِنَّا رَآدُّوهُ إِلَيۡكِ وَجَاعِلُوهُ مِنَ ٱلۡمُرۡسَلِينَ ٧
நாம் மூஸாவின் தாயாருக்குப் பின்வருமாறு உள்ளுதிப்பு ஏற்படுத்தினோம்: “நீர் அவருக்குப் பாலூட்டும். ஃபிர்அவ்னும் அவனுடைய சமூகமும் அவரைக் கொன்றுவிடுவார்கள் என்று நீர் அஞ்சினால் அவரை ஒரு பெட்டியில் வைத்து நைல் நதியில் போட்டு விடும். அவர் மூழ்கிவிடுவார் என்றோ ஃபிர்அவ்ன் அவரைக் கொன்றுவிடுவான் என்றோ நீர் அஞ்சாதீர். அவரது பிரிவால் கவலைப்படாதீர். நிச்சயமாக நாம் அவரை உம்மிடம் உயிருடன் திரும்பக் கொண்டு வருவோம். அவரை அல்லாஹ் தனது படைப்பினங்களுக்கு அனுப்பும் தூதர்களில் ஒருவராக ஆக்குவோம்.”