Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Qasas — Ayah 8

فَٱلۡتَقَطَهُۥٓ ءَالُ فِرۡعَوۡنَ لِيَكُونَ لَهُمۡ عَدُوّٗا وَحَزَنًاۗ إِنَّ فِرۡعَوۡنَ وَهَٰمَٰنَ وَجُنُودَهُمَا كَانُواْ خَٰطِـِٔينَ ٨
நாம் அவருக்கு ஏற்படுத்திய உள்ளுதிப்பை அவள் செயல்படுத்தினாள். ஒரு பெட்டியில் வைத்து அவரைக் நதியில் போட்டுவிட்டார். ஃபிர்அவ்னின் குடும்பத்தினர் அவரைக் கண்டெடுத்தனர். அது அவர் ஃபிர்அவ்னுக்கு எதிரியாகி அவனது ஆட்சியதிகாரத்தை அழிக்க வேண்டும் என்பதற்காகவும் அவனது கவலைக்குக் காரணமாக இருந்து அல்லாஹ் நாடியவாறு நிகழ வேண்டும் என்பதற்காகவும்தான். நிச்சயமாக ஃபிர்அவ்னும் அவனுடைய அமைச்சர் ஹாமானும் அவர்களுடைய படையினரும் நிராகரிப்பினாலும் அக்கிரமத்தினாலும் பூமியில் குழப்பம் விளைவித்ததனாலும் பாவிகளாக இருந்தார்கள்.