Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Qasas — Ayah 76

۞ إِنَّ قَٰرُونَ كَانَ مِن قَوۡمِ مُوسَىٰ فَبَغَىٰ عَلَيۡهِمۡۖ وَءَاتَيۡنَٰهُ مِنَ ٱلۡكُنُوزِ مَآ إِنَّ مَفَاتِحَهُۥ لَتَنُوٓأُ بِٱلۡعُصۡبَةِ أُوْلِي ٱلۡقُوَّةِ إِذۡ قَالَ لَهُۥ قَوۡمُهُۥ لَا تَفۡرَحۡۖ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلۡفَرِحِينَ ٧٦
நிச்சயமாக காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான். அவர்கள் மீது அவன் கர்வம் கொண்டான். நாம் அவனுக்கு ஏராளமான செல்வங்களை வழங்கியிருந்தோம். எந்த அளவுக்கெனில், பலம்பொருந்திய மக்கள் கூட்டம்கூட அவற்றின் சாவிகளை சிரமத்துடனே சுமக்கும். அவனது சமூகத்தினர் அவனிடம் கூறிய போது: “கர்வம் கொள்ளாதே. நிச்சயமாக அல்லாஹ் கர்வம் கொள்வோரை நேசிப்பதில்லை. மாறாக அவர்களை வெறுக்கிறான். அதனால் அவர்களை தண்டிக்கிறான்.