Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Qasas — Ayah 77

وَٱبۡتَغِ فِيمَآ ءَاتَىٰكَ ٱللَّهُ ٱلدَّارَ ٱلۡأٓخِرَةَۖ وَلَا تَنسَ نَصِيبَكَ مِنَ ٱلدُّنۡيَاۖ وَأَحۡسِن كَمَآ أَحۡسَنَ ٱللَّهُ إِلَيۡكَۖ وَلَا تَبۡغِ ٱلۡفَسَادَ فِي ٱلۡأَرۡضِۖ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلۡمُفۡسِدِينَ ٧٧
அல்லாஹ் உமக்கு வழங்கிய செல்வங்களை நன்மையான வழியில் செலவு செய்து மறுமையின் வீட்டுக்கான நன்மைகளைத் தேடிக்கொள். இவ்வுலகில் வீண்விரயமின்றியும் பெருமையின்றியும் உண்ணல், குடித்தல், ஆடை போன்ற அருள்களான உனது பங்கையும் மறந்துவிடாதே. அல்லாஹ் உனக்கு நன்மை செய்தவாறே நீயும் அவனுடனும் அவனுடைய அடியார்களுடனும் நல்லமுறையில் நடந்துகொள். அவனுக்குக் கீழ்ப்படியாமல் பாவங்கள் செய்து பூமியில் குழப்பம் விளைவிக்காதே. நிச்சயமாக அல்லாஹ் பூமியில் குழப்பம் விளைவிப்பவர்களை நேசிப்பதில்லை. மாறாக அவர்களை வெறுக்கிறான்.