Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Qasas — Ayah 78

قَالَ إِنَّمَآ أُوتِيتُهُۥ عَلَىٰ عِلۡمٍ عِندِيٓۚ أَوَلَمۡ يَعۡلَمۡ أَنَّ ٱللَّهَ قَدۡ أَهۡلَكَ مِن قَبۡلِهِۦ مِنَ ٱلۡقُرُونِ مَنۡ هُوَ أَشَدُّ مِنۡهُ قُوَّةٗ وَأَكۡثَرُ جَمۡعٗاۚ وَلَا يُسۡـَٔلُ عَن ذُنُوبِهِمُ ٱلۡمُجۡرِمُونَ ٧٨
காரூன் கூறினான்: “நிச்சயமாக என் அறிவால், ஆற்றலால்தான் இந்த செல்வங்களெல்லாம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. நான் இதற்குத் தகுதியானவன்தான்.” காரூனைவிட அதிக செல்வங்களும் பலமும் உடைய எத்தனையோ சமூகங்களை அல்லாஹ் அழித்துள்ளான் என்பதை அவன் அறியவில்லையா? அவர்களின் செல்வங்களோ ஆற்றலோ அவர்களுக்கு எந்தப் பயனையும் அளிக்கவில்லை. குற்றவாளிகளின் பாவங்களைக் குறித்து அல்லாஹ் அறிந்துவைத்திருப்பதால் அறியவேண்டும் என்று அவர்களிடம் கேட்கப்படமாட்டார்கள். கண்டிக்கும் விதமாகவே அவர்களிடம் கேள்வி கேட்கப்படும்.