Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Qasas — Ayah 84

مَن جَآءَ بِٱلۡحَسَنَةِ فَلَهُۥ خَيۡرٞ مِّنۡهَاۖ وَمَن جَآءَ بِٱلسَّيِّئَةِ فَلَا يُجۡزَى ٱلَّذِينَ عَمِلُواْ ٱلسَّيِّـَٔاتِ إِلَّا مَا كَانُواْ يَعۡمَلُونَ ٨٤
மறுமை நாளில் யார் -தொழுகை, ஸகாத், நோன்பு, போன்ற ஏனைய- நன்மைகளைக் கொண்டு வருவாரோ அவருக்கு அந்த நன்மைகளை விட சிறந்த கூலி உண்டு. அவரது நன்மைக்கு பத்து மடங்கு கூலி வழங்கப்படும். யார் -நிராகரிப்பு, வட்டி உண்ணுதல், விபச்சாரம், மற்றும் ஏனைய- தீமையைக் கொண்டுவருவாரோ எவ்வித அதிகரிப்புமின்றி அவர்கள் செய்த தீய செயல்களுக்கேற்பவே அவர்களுக்குத் தண்டனையளிக்கப்படும்.