Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Qasas — Ayah 85

إِنَّ ٱلَّذِي فَرَضَ عَلَيۡكَ ٱلۡقُرۡءَانَ لَرَآدُّكَ إِلَىٰ مَعَادٖۚ قُل رَّبِّيٓ أَعۡلَمُ مَن جَآءَ بِٱلۡهُدَىٰ وَمَنۡ هُوَ فِي ضَلَٰلٖ مُّبِينٖ ٨٥
நிச்சயமாக உம்மீது குர்ஆனை இறக்கி கட்டாயமாக அதனை எடுத்துரைக்கும்படியும் அதன்படி செயல்படும்படியும் கூறியவன் உம்மை மக்காவின்பால் வெற்றி பெற்றவராக திரும்பச் செய்வான். -தூதரே!- நீர் இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “யார் நேர்வழியைக் கொண்டு வந்துள்ளார், யார் சத்தியத்தை விட்டும் தெளிவான வழிகேட்டில் இருக்கின்றார் என்பதை என் இறைவன் நன்கறிவான்.