Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-'Ankabut — Ayah 26

۞ فَـَٔامَنَ لَهُۥ لُوطٞۘ وَقَالَ إِنِّي مُهَاجِرٌ إِلَىٰ رَبِّيٓۖ إِنَّهُۥ هُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ٢٦
லூத் அவரை ஏற்றுக் கொண்டார். இப்ராஹீம் கூறினார்: “நிச்சயமாக நான் என் இறைவனின் பக்கம் அருள் வளமிக்க ஷாம் தேசத்தை நோக்கி புலம்பெயர்ந்து செல்கின்றேன். திட்டமாக அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. அவன் தன் பக்கம் புலம்பெயர்பவர்களை இழிவுபடுத்த மாட்டான். தனது நிர்ணயத்திலும் திட்டத்திலும் அவன் ஞானம் மிக்கவன்.