Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-'Ankabut — Ayah 27

وَوَهَبۡنَا لَهُۥٓ إِسۡحَٰقَ وَيَعۡقُوبَ وَجَعَلۡنَا فِي ذُرِّيَّتِهِ ٱلنُّبُوَّةَ وَٱلۡكِتَٰبَ وَءَاتَيۡنَٰهُ أَجۡرَهُۥ فِي ٱلدُّنۡيَاۖ وَإِنَّهُۥ فِي ٱلۡأٓخِرَةِ لَمِنَ ٱلصَّٰلِحِينَ ٢٧
நாம் இப்ராஹீமுக்கு இஸ்ஹாக்கையும் அவரது மகன் யஅகூபையும் வழங்கினோம். அவருடைய சந்ததியில் நபித்துவத்தை ஏற்படுத்தி அவர்களுக்கு இறக்கப்பட்ட வேதங்களையும் வழங்கினோம். அவர் சத்தியத்தில் உறுதியாக இருந்ததற்கான கூலியை இவ்வுலகில் நல்ல பிள்ளைகள், அழகிய புகழ் மூலம் அவருக்கு வழங்கினோம். நிச்சயமாக மறுமையில் அவருக்கு நல்லவர்களுக்கு கூலி வழங்கப்படுவதுபோன்றே வழங்கப்படும். உலகில் அவருக்கு வழங்கப்பட்டதனால் மறுமையில் அவருக்காக தயார்படுத்தப்பட்டுள்ள சங்கையான கூலியில் எவ்வித குறைவும் செய்யப்படாது.