Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-'Ankabut — Ayah 32

قَالَ إِنَّ فِيهَا لُوطٗاۚ قَالُواْ نَحۡنُ أَعۡلَمُ بِمَن فِيهَاۖ لَنُنَجِّيَنَّهُۥ وَأَهۡلَهُۥٓ إِلَّا ٱمۡرَأَتَهُۥ كَانَتۡ مِنَ ٱلۡغَٰبِرِينَ ٣٢
இப்ராஹீம் வானவர்களிடம் கூறினார்: “நிச்சயமாக நீங்கள் அழிக்க நாடும் அந்த ஊரில் லூத்தும் இருக்கின்றாரே! அவர் அநியாயக்காரர் அல்லவே!” வானவர்கள் கூறினார்கள்: “அங்கு வசிப்பவர்களை நாம் நன்கறிவோம். அந்த சமூகத்தின் மீது இறக்கும் வேதனையில் இருந்து அவரையும் அவரது - மனைவியைத் தவிர - குடும்பத்தினரையும் நாம் காப்பாற்றுவோம். அவள் எஞ்சியிருந்து அழிபவர்களில் ஒருத்தியாக இருப்பாள். பின்பு அவர்களோடு அவளையும் அளித்து விடுவோம்.