Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-'Ankabut — Ayah 33

وَلَمَّآ أَن جَآءَتۡ رُسُلُنَا لُوطٗا سِيٓءَ بِهِمۡ وَضَاقَ بِهِمۡ ذَرۡعٗاۖ وَقَالُواْ لَا تَخَفۡ وَلَا تَحۡزَنۡ إِنَّا مُنَجُّوكَ وَأَهۡلَكَ إِلَّا ٱمۡرَأَتَكَ كَانَتۡ مِنَ ٱلۡغَٰبِرِينَ ٣٣
நாம் லூத்தின் சமூகத்தை அழிக்க அனுப்பிய வானவர்கள் லூத்திடம் வந்தபோது தனது சமூகத்தின் கேடுகெட்ட பழக்கத்தை பயந்து அவர்களின் வருகை அவரை கவலை கொள்ளச் செய்தது. தூதர்கள் அவரிடம் ஆண்களின் உருவில் வந்தார்கள். அவரது சமூகமோ பெண்களைவிடுத்து ஆண்களிடம் தங்களின் காம இச்சையைத் தணித்துக் கொள்பவர்களாக இருந்தார்கள். வானவர்கள் அவரிடம் கூறினார்கள்: “பயப்படாதீர். உங்களின் சமூகம் உமக்கு தீங்கிழைக்க முடியாது. அவர்களை நாம் அழித்துவிடுவோம் என்று நாம் கூறியதற்காக கவலை கொள்ளாதீர். நிச்சயமாக நாம் உம்மையும் உம் மனைவியைத் தவிர உன்குடும்பத்தினரையும் காப்பாற்றி விடுவோம். அவள் எஞ்சியிருந்து அழியக்கூடியவர்களில் ஒருத்தியாக இருப்பாள். பின்பு அவர்களுடன் சேர்த்து அவளையும் அழித்துவிடுவோம்.