Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-'Ankabut — Ayah 47

وَكَذَٰلِكَ أَنزَلۡنَآ إِلَيۡكَ ٱلۡكِتَٰبَۚ فَٱلَّذِينَ ءَاتَيۡنَٰهُمُ ٱلۡكِتَٰبَ يُؤۡمِنُونَ بِهِۦۖ وَمِنۡ هَٰٓؤُلَآءِ مَن يُؤۡمِنُ بِهِۦۚ وَمَا يَجۡحَدُ بِـَٔايَٰتِنَآ إِلَّا ٱلۡكَٰفِرُونَ ٤٧
உமக்கு முன்னுள்ளவர்கள் மீது வேதங்களை இறக்கியவாறே நாம் உம்மீதும் குர்ஆனை இறக்கினோம். அவர்களில் தவ்ராத்தைப் படிக்கும் சிலர் - அப்துல்லாஹ் இப்னு சலாம் போன்றோர் - தங்களின் வேதங்களில் குர்ஆனைக்குறித்து வர்ணிக்கப்பட்டிருப்பதைக் காண்பதால் அதன் மீது நம்பிக்கைகொள்கிறார்கள். இணைவைப்பாளர்களில் சிலரும் அதன் மீது நம்பிக்கைகொள்கிறார்கள். சத்தியம் தெளிவான பின்னரும் மறுப்பதையும் நிராகரிப்பதையும் வழமையாகக் கொண்டோரே நம்முடைய வசனங்களை மறுக்கிறார்கள்.