Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-'Ankabut — Ayah 48

وَمَا كُنتَ تَتۡلُواْ مِن قَبۡلِهِۦ مِن كِتَٰبٖ وَلَا تَخُطُّهُۥ بِيَمِينِكَۖ إِذٗا لَّٱرۡتَابَ ٱلۡمُبۡطِلُونَ ٤٨
தூதரே!- குர்ஆனுக்கு முன்னர் நீர் எந்த வேதத்தையும் படித்துக் கொண்டிருக்கவில்லை. உம் வலக்கரத்தால் எழுதக்கூடியவராக நீர் இருந்ததில்லை. நிச்சயமாக நீர் எழுதவோ படிக்கவோ தெரியாத உம்மீயாக இருந்தீர். நீர் படிக்கக்கூடியவராக, எழுதக்கூடியவராக இருந்திருந்தால் மக்களில் மூடர்கள் உம் தூதுத்துவத்தில் சந்தேகம் கொண்டிருப்பார்கள்; நீர் முந்தைய வேதங்களிலிருந்துதான் எடுத்து எழுதுகின்றீர் என்று கூறியிருப்பார்கள்.