Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-'Ankabut — Ayah 60

وَكَأَيِّن مِّن دَآبَّةٖ لَّا تَحۡمِلُ رِزۡقَهَا ٱللَّهُ يَرۡزُقُهَا وَإِيَّاكُمۡۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ٦٠
தமது உணவை சேமித்து வைக்கவோ, சுமந்து செல்லவோ சக்தியற்ற உயிரினங்கள் அனைத்திற்கும் -அவை அதிகமானவை- உங்களுக்கும் அல்லாஹ்வே உணவளிக்கிறான். எனவே பசிக்குப் பயந்து புலம் பெயராமல் இருக்க உங்களுக்கு அனுமதியில்லை. அவன் உங்களின் பேச்சுகளை செவியேற்கக்கூடியவன்; உங்களின் எண்ணங்களையும் செயல்களையும் நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.