Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-'Ankabut — Ayah 61

وَلَئِن سَأَلۡتَهُم مَّنۡ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَسَخَّرَ ٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَ لَيَقُولُنَّ ٱللَّهُۖ فَأَنَّىٰ يُؤۡفَكُونَ ٦١
தூதரே!- இந்த இணைவைப்பாளர்களிடம், “வானங்களைப் படைத்தது யார்? பூமியைப் படைத்தது யார்? மாறி மாறி வரும் சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தித் தந்தவன் யார்?” என்று நீர் கேட்டால், “அல்லாஹ்தான் அவற்றைப் படைத்தான்” என்று கூறுவார்கள். பின்னர் எவ்வாறு அவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொள்ளாமல் அவனை விடுத்து பலனளிக்கவோ, தீங்களிக்கவோ சக்தியற்ற சிலைகளை வணங்குகிறார்கள்?