Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-'Ankabut — Ayah 63

وَلَئِن سَأَلۡتَهُم مَّن نَّزَّلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَأَحۡيَا بِهِ ٱلۡأَرۡضَ مِنۢ بَعۡدِ مَوۡتِهَا لَيَقُولُنَّ ٱللَّهُۚ قُلِ ٱلۡحَمۡدُ لِلَّهِۚ بَلۡ أَكۡثَرُهُمۡ لَا يَعۡقِلُونَ ٦٣
தூதரே!- இந்த இணைவைப்பாளர்களிடம், “வானத்திலிருந்து மழையை இறக்கி அதன் மூலம் வறண்ட பூமியை செழிப்பாக்கியவன் யார்?” என்று நீர் கேட்டால், “வானத்திலிருந்து மழையை இறக்கி பூமியை செழிப்பாக்கியவன் அல்லாஹ்தான்” என்று நிச்சயம் கூறுவார்கள். -தூதரே!- நீர் கூறுவீராக: “உங்களுக்கு எதிராக ஆதாரத்தை வெளிப்படுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.” அவர்களில் பெரும்பாலானோர் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்பதே நிதர்சனம். அவர்கள் விளங்கியிருந்தால் பலனளிக்கவோ, தீங்கிழைக்கவோ சக்தியற்ற சிலைகளை அல்லாஹ்வுக்கு இணையாக ஆக்கியிருக்க மாட்டார்கள்.