Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-'Ankabut — Ayah 64

وَمَا هَٰذِهِ ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَآ إِلَّا لَهۡوٞ وَلَعِبٞۚ وَإِنَّ ٱلدَّارَ ٱلۡأٓخِرَةَ لَهِيَ ٱلۡحَيَوَانُۚ لَوۡ كَانُواْ يَعۡلَمُونَ ٦٤
இந்த உலக வாழ்க்கை -இதிலுள்ள இன்பங்கள்- அதன் மீது உள்ளம் மோகம் கொண்டவர்களுக்கு வீணும் விளையாட்டுமேயாகும். அது மிக விரைவில் முடிந்துவிடும். நிலையாக இருக்காது. நிச்சயமாக மறுமையின் வீடே நிலைத்திருக்கக்கூடிய உண்மையான வாழ்க்கையாகும். அவர்கள் அறிந்திருந்தால் நிலையானதை விட்டுவிட்டு அழியக்கூடியதை முற்படுத்தியிருக்க மாட்டார்கள்.